image

நிலையான வைப்புக்கள் மற்றும் முதலீடுகள்

நிலையான வைப்புக்கள் மற்றும் முதலீடுகள்

உங்களுடைய தனித்துவமான தேவைகளுக்கேற்றவாறு நாம் வடிவமைத்துள்ள பல்வகைப்பட்ட நிலையான வைப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக பயனடையுங்கள்.

fixed-deposits

நிலையான வைப்புக்கள்

ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் சிறந்த வட்டி வீதங்கள் மற்றும் நெகிழ்வுடனான தவணைக் காலங்களுடன், நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான நம்பிக்கையான மற்றும் சௌகரியமான வழியை எமது நிலையான வைப்புக் கணக்குகள் வழங்குகின்றன. HDFC வழங்கும் அதிக வட்டியுடன், உங்களுடைய வருமானம் சீராக வளர்ச்சியடைவதை காண்பதையிட்டு நீங்கள் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக வாழலாம்.
vishrama-udana-fixed-deposit

விஷ்ராம உதான நிலையான வைப்பு

சிரேஷ்ட பிரஜைகளுக்கு தாம் பாதுகாப்புடன் உள்ளோம் என்ற உணர்வை அவர்களுக்கு வழங்குவதே HDFC இன் நோக்கமாகும். உங்களுடைய முதலீடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்தியவாறு, சிரேஷ்ட பிரஜைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு நிலையான வைப்புத் திட்டமே விஷ்ராம உதான நிலையான வைப்புக்கள்.
  • இலகுவான முதலீடு: ரூபா 25,000 தொகையுடன் உங்களுடைய நிலையான வைப்பினை ஆரம்பிக்க முடியும்.
  • நெகிழ்வான தவணைக்காலம் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள்: 3, 6, 12, 24, 36, 48 மற்றும் 60 மாதங்கள் என உங்களுடைய தவணைக்காலத்தை தெரிவு செய்யுங்கள். உங்களுடைய முதலீட்டு தவணைக்காலத்தின் அடிப்படையில் வட்டியை மாதாந்தம், வருடாந்தம் அல்லது முதிர்வின் போது சம்பாதிக்க முடியும்.
  • உயர் தொகை கொண்ட முதலீடுகளுக்கு வெகுமதிகள்: உயர் தொகை கொண்ட முதலீடுகளை நீங்கள் மேற்கொள்ளும் போது பிரத்தியேகமான வட்டி வீதங்கள் மற்றும் கூடுதல் நன்மைகளை அனுபவியுங்கள்.
hdfc-max-fixed-deposits

HDFC MAX நிலையான வைப்புக்கள்

HDFC Max நிலையான வைப்புத் திட்டத்துடன் உங்களுடைய தனிப்பட்ட மற்றும் தனித்துவமான முதலீட்டுத் தேவைகளுக்கேற்றவாறு தவணைக்காலங்களை நீங்கள் தெரிவு செய்து கொள்ள முடியும். நீங்கள் ஈட்டுகின்ற வட்டியை உச்சமாக்கிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வலுவான நிலையான வைப்புத் திட்டத்துடன் சிறந்த வட்டி மற்றும் பல்வகைப்பட்ட பிரத்தியேக நன்மைகளை அனுபவியுங்கள்.
  • இலகுவான முதலீடு: ரூபா 25,000 என்ற குறைந்தபட்ச தொகையுடன் உங்களுடைய நிலையான வைப்பினை ஆரம்பிக்க முடியும்.
  • தினவாரியான வைப்புத் திட்டம்: 100 தினங்கள், 300 தினங்கள், 500 தினங்கள் காலத்தை தெரிவு செய்ய முடியும்.
  • கூட்டுக் கணக்கு - கூட்டு வைப்புக்களை ஆரம்பிக்கும் வசதி.
hdfc-vishrama-rekawarana

HDFC விஷ்ராம ரெகவரண

விவசாயிகள் சமூகம், அரச ஆசிரியர்கள் சமூகம், மற்றும் அரச சார்பற்ற கைத்தொழில் ஊழியர்கள் சமூகம் போன்ற சமூகங்களின் விசேட தேவைகளை நிறைவேற்றுகின்ற, தனிப்பயனாக்கப்பட்ட நிதியியல் கருவியாக அமைந்துள்ளதே HDFC விஷ்ராம ரெகவரண எனப்படும் எமது தனித்துவமான ஓய்வுகால நிதியாகும். குறிப்பிட்ட துறைசார் தீர்வுகள் மற்றும் உங்களுக்கான தீர்வுகளை தனிப்பயனாக்கி நாம் உங்களுக்கு வழங்குவதை, நாடளவிலுள்ள எமது கிளை வலையமைப்பு எமக்கு இலகுவாக்கின்றது.
  • அதியுயர் வட்டியை சம்பாதிப்பதற்கான வாய்ப்பு.
  • பரந்த வகைப்பட்ட வாடிக்கையாளர்களின் நிதியியல் தேவைகளை நிறைவேற்றுகிறது.
  • குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூபா. 2000
set-for-life

Set for Life

சாமர்த்தியமான முதலீட்டுடன், கவலையற்ற மற்றும் நிதி ரீதியாக சுதந்திரமான எதிர்காலத்திற்கு உங்களுக்கு வலுவூட்டுகின்ற, செல்வத்தை பெருக்கும் ஒரு தனித்துவமான திட்டமாக Set for Life அமைந்துள்ளது. எவ்வளவு விரைவாக நீங்கள் இதனை ஆரம்பிக்கின்றீர்களோ, செல்வத்தைப் பெருக்குவதில் உங்களது வருமானமும், நிபுணத்துவமும் அந்தளவுக்கு மகத்தானவையாக மாறும். முதலீட்டில் நீங்கள் ஒரு கைதேர்ந்தவராக மாறுவதற்கு உதவுவது மட்டுமன்றி, எண்ணற்ற நன்மைகளையும் Set for Life வழங்குகின்றது.
  • உயர் வட்டி: சந்தையில் கிடைக்கும் வட்டி வீதங்களை விடவும் உயர்வான வட்டி வீதங்களை வழங்குகின்றது.
  • பணவீக்கத்திற்கேற்ப திருத்தம் செய்யப்படுதல்: பணவீக்கத்திற்கேற்ப வட்டி வீதமும் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தானாகவே திருத்தம் செய்யப்படுகின்றது.
  • மகத்தான நெகிழ்வு: நிலையான தவணைக்கொடுப்பனவு தேவைப்பாடுகள் கிடையாது. ரூபா 2000 தொகையுடன் ஆரம்பித்து, தினசரி, மாதாந்த, வருடாந்த அல்லது ஒரே தொகை என்ற அடிப்படையில் வேண்டிய தொகையை வைப்புச் செய்யுங்கள்.