image

நல்ல விஷயங்களைச் செய்வதில் கவனம் செலுத்துங்கள். நாம் ஒன்றாகச் சேர்ந்து அடையக்கூடிய சக்தியை நம்புகிறோம்.

நல்ல விஷயங்களைச் செய்வதில் கவனம் செலுத்துங்கள். நாம் ஒன்றாகச் சேர்ந்து அடையக்கூடிய சக்தியை நம்புகிறோம்.

HDFC வங்கி உங்களை அன்புடன் வரவேற்கின்றது

உங்கள் கனவுகளையும், எதிர்பார்ப்புக்களையும், அபிலாஷைகளையும் அடைந்துகொள்வதற்கு HDFC வங்கி உங்களை அன்புடன் வரவேற்கின்றது. எமது வாடிக்கையாளர்களின் பல்வகைப்பட்ட தேவைப்பாடுகளை உணர்ந்து, அவர்களுக்கு தனித்துவமான நிதியியல் தீர்வுகளை அனைவருக்கும் வழங்கி, அவர்களது வாழ்வில் வலுவூட்டுவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். HDFC வங்கியானது அனைவரும் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை கட்டமைப்பதற்கும், அவர்களின் கனவு இல்லம், வணிகம் மற்றும் வாழ்க்கை முறைமையை நனவாக்கிக் கொள்வதற்கும் தகுதியுடையவர்கள் என உறுதியாக நம்புகிறது. எமது தொழில் நிபுணத்துவம் மிக்க குழு சிறந்த செயல் முறைமை மூலம் நீங்கள் நம்பிக்கையான மற்றும் இலகுவான நிதி நிலைமையை அடைவதற்கு வழிகாட்டுகின்றது. எனவே நிதியியல் ஸ்திரத்தன்மையுடன் சொந்தமாக வீடொன்றைப் பெற்றுக்கொள்ள, வெற்றிகரமாக வணிக முயற்சிகளை முன்னெடுக்க மற்றும் விரும்புகின்ற வழியில் வாழ்வை முன்னெடுப்பதற்கு இந்த வாய்ப்பினை தவற விடாதீர்கள்.

HDFC வங்கி

எம்மீது நம்பிக்கை வைத்துள்ள வாடிக்கையாளர்களின் வாழ்வை மேம்படுத்தி, வளம் பெறச் செய்யும் ஒரேயொரு மற்றும் உண்மையான நோக்கத்துடன் HDFC வங்கி இயங்கி வருகின்றது. இந்த நோக்கத்தில் கொண்ட கொள்கை மாறாது, கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக நாம் பயணித்துள்ளோம். நாட்டில் அனைத்து பாகங்களிலுமுள்ள பல்வேறுபட்ட மக்கள் தாம் இல்லமொன்றைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கனவை நனவாக்கி, நீண்ட கால அடிப்படையில் நிதியியல்ரீதியாக சொந்தக்காலில் நிற்பதற்கு உதவுவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். எமது தனித்துவமான மற்றும் அக்கறை கொண்ட வங்கிச்சேவை கோட்பாடும் மற்றும் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்ட தீர்வுகள் மற்றும் சேவைகளும் எமது வாடிக்கையாளர்கள் அவர்களது பல்வேறுபட்ட அபிலாஷைகளை அடையப்பெறுவதற்கு உறுதுணை புரிகின்றன.  

  • நோக்கம்

    "நிலைபேறான வாழ்வுக்கு நிதியியல் தீர்வுகளை வழங்கி, மதிப்பைக் கூட்டுவதில் தொழில்முயற்சியாளர்களுக்கு உதவுவதில் அர்ப்பணிப்புடன் உழைத்தல்"

  • பணி இலக்கு

    "நிலைபேறான வீடமைப்பு மற்றும் வாழ்க்கைத் தரங்களை உறுதி செய்வதில் முன்னணி நிதியியல் கூட்டாளராகத் திகழ்தல்"

HDFC வங்கியின் அடிப்படைக் கோட்பாடு

அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சொந்த இல்லமொன்றைக் கொண்டிருப்பதற்கு உதவி, அத்தியாவசியமான நிதியியல் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுத்து, சமத்துவமான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதேசமயம், செல்வத்தைப் பெருக்கி, தமது நிதியியல் ஸ்திரத்தை மேம்படுத்தி, சமூகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார நலனுக்கு பங்களிப்பதற்கு தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு வலுவூட்டுதல்.  

எமது தலைவர்கள்

அறிக்கைகள்