
HDFC பிரதிலாப
இலகுவாக கணக்கை ஆரம்பிக்க
உங்களுடைய அன்றாட வங்கிச்சேவை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மிகவும் உகந்த சேமிப்புக் கணக்கொன்றை எதிர்பார்க்கின்றீர்களா? HDFC பிரதிலாப இனை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது. உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ற, மிகச் சிறந்த பலாபலன்கள் மற்றும் இலகுவான பரிவர்த்தனைகளை வழங்குகின்ற சிறந்த தீர்வு.
- உங்கள் அருகிலுள்ள HDFC வங்கிக் கிளையை நாடவும்
- விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளவும்
- உங்கள் தேசிய அடையாள அட்டை (NIC), சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் நகலை சமர்ப்பிக்கவும்.
முக்கிய அம்சங்கள்
- குறைந்தபட்ச வைப்புத்தொகை: ரூ. 2000/-
- கவர்ச்சிகரமான வட்டி வீதம்: கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை அனுபவிக்கவும்.
- சிறப்பு வீட்டுக் கடன்கள்: உங்கள் சொந்த வீடு என்ற கனவை நனவாக்க, வீட்டுக் கடன்களுக்கான சிறப்பு விதிமுறைகள்.
- இலவச நிலையான கட்டளை: நிதியை அனுப்ப இலவச, நிலையான கட்டளை அமைக்கவும்
- எளிதான கடன் தவணை செலுத்துதல்: உங்கள் பிரதிலாபா சேமிப்புக் கணக்கு மூலம் மாதாந்த HDFC வீட்டுக் கடன் தவணைகளைச் செலுத்துங்கள்.
- வரையறையற்ற பணம் மீளப் பெறுதல்: வட்டி வீதங்களைக் குறைக்காமல் வரையறையற்ற மாதாந்த பணம் மீளப் பெறுதல்.
- ஈ-வங்கி வசதி: உங்கள் கணக்கை ஆன்லைனில், எந்த நேரத்திலும், எங்கும் நிர்வகிக்க, இலக்ரோனிக் வங்கிச் சேவைகளின் வசதியை அனுபவிக்கவும்.
- எஸ்.எம்.எஸ். வசதி: அனைத்து கணக்கு பரிவர்த்தனைகளிலும் எஸ்.எம்.எஸ். Alerts களுடன் Update நிலையில் இருங்கள்.
- வசதியான கட்டண கொடுப்பனவுகள்: U-Pay மற்றும் I-Pay போன்ற செயலிகள் (App) மூலம் எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் மற்றும் பயன்பாட்டு பில்களுக்கும் சிரமமின்றி பணத்தை பரிமாற்றவும்.
- கணக்கு அறிக்கைகள்: கோரிக்கையின் பேரில் உங்கள் கணக்கின் விரிவான அறிக்கைகளைப் பெறவும். கட்டணம் அறவிடப்படலாம்.
- காசோலை வரவு வைப்பு: HDFC க்கு ஆதரவாக வரையப்பட்ட காசோலைகள் உங்கள் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- ATM கார்ட் மற்றும் டெபிட் கார்ட் வசதி: நாடளாவிய ரீதியில் உள்ள எந்த ATM இல் இருந்தும் பணத்தைப் பெற்று, உங்களின் அனைத்து கட்டண பரிவர்த்தனைகளையும் செய்யுங்கள்.
தகுதி
18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் கணக்கை ஆரம்பபிக்கலாம்.