
HDFC சம்பள சேவை(கள்) - வெற்றியின் அடித்தளம்
இலகுவாக கணக்கை ஆரம்பிக்க
மாதாந்தம் வருமானமீட்டுபவர்களுக்கு தனித்துவமானதொரு சேமிப்புத் தீர்வு. நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தை பிரகாசமானதொரு எதிர்காலத்திற்காக உறுதிசெய்வதற்கு சேமிப்பதற்கான மிகச் சிறந்த தெரிவாக இது காணப்படுகின்றது. வாழ்வில் வளர்ச்சி பெற்று, வெற்றி காண்பதற்கு உங்களுக்கு இடமளிக்கின்ற பல்வேறு நன்மைகளை இது உங்களுக்கு அளிக்கின்றது. உங்களுடைய சம்பளத்தை அல்லது மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் ரூபா 10,000 தொகையை HDFC சம்பள சேவர் கணக்கில் வைப்பிலிட ஆரம்பித்து, மகத்தான நன்மைகளை அனுபவியுங்கள்.
- அருகிலுள்ள HDFC கிளையை நாடவும்
- விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்
- உங்கள் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது கடவுச்சீட்டை வழங்கவும்
முக்கிய அம்சங்கள்
- குறைந்தபட்ச வைப்புத் தொகை - ரூ. 10,000/-
- வட்டி வீதங்கள் - வழக்கமான சேமிப்புக் கணக்கை விட அதிக வட்டி வீதம் சந்தையில் நிலவும் நிலையான வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்டது.
- வட்டி தினசரி கணக்கிடப்பட்டு மாதந்தோறும் வைப்புச் செய்யப்படுகிறது
- ATM கார்ட் - இலவசமாக வழங்கப்படுகிறது
- இணைய வங்கி வசதி - இலவசம்
- SMS அனுப்பும் வசதி - இணைப்புக் கட்டணம் இல்லை
- வீட்டுக் கடன்கள்/ தனிநபர் கடன்கள்/ தங்கக் கடன்கள்/ வணிகக் கடன்கள்/ குத்தகைக்கான சிறப்பு வட்டி வீதங்கள்
தகுதி
18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையும் இந்தக் கணக்கை ஆரம்பிக்க முடியும்