


HDFC ஸ்மார்ட் கோல் திட்டங்கள்
HDFC ஸ்மார்ட் கோல் திட்டங்கள்
உங்களுடைய இடைக்கால இலக்குகளை நீங்கள் அடையப்பெறுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு தனித்துவமான சேமிப்புத் திட்டமாக HDFC ஸ்மார்ட் கோல் காணப்படுகின்றது. புதிதாக காரொன்றை வாங்குவதற்கோ, திருமணம் முடிப்பதற்கோ, அல்லது மேற்படிப்புக்காக உங்களுடைய பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கோ என உங்களுடைய தேவை எதுவாக இருப்பினும், உங்களது கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கு உதவ HDFC ஸ்மார்ட் கோல் திட்டங்கள் உள்ளன.
- உங்கள் அருகிலுள்ள HDFC வங்கிக் கிளையை நாடவும்
- விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளவும்
- உங்கள் தேசிய அடையாள அட்டை (NIC), சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் நகலை சமர்ப்பிக்கவும்.
முக்கிய அம்சங்கள்
- குறைந்தபட்ச சேமிப்புக் காலம் 3 ஆண்டுகள்: மூன்று வருட காலத்திற்குள் சேமிக்கவும். இந்த காலகட்டத்தின் முடிவில், திரட்டப்பட்ட வட்டியுடன் சேர்த்து உங்கள் வைப்புத்தொகையை திரும்பப் பெறுங்கள்.
- இலகுவாக கணக்கை ஆரம்பிக்க : உங்கள் கணக்கை வெறும் ரூ. 2,000/-ரூபாவைக் கொண்டு ஆரம்பிக்கலாம்.
- அதிக வட்டி வீதங்கள்: போட்டி தன்மைகொண்ட வட்டி வீதங்கள்.
- நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதி: எந்த நேரத்திலும் எந்த தொகையையும் வைப்புச் செய்யவும், 3 வருட காலக்கெடுவிற்குள் உங்கள் இலக்குகளை முன்கூட்டியே திட்டமிடவும் அடையவும் வாய்ப்பு கிடைக்கிறது.
- சேமிப்பதற்கான ஊக்கத்தொகை: வட்டி தினசரி அடிப்படையில் கணக்கிடப்பட்டு, மாதந்தோறும் உங்கள் ஸ்மார்ட் கோல்ஸ் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தகுதி
18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் கணக்கை ஆரம்பபிக்கலாம்.
