image

சேமிப்புத் தீர்வுகள்

சேமிப்புத் தீர்வுகள்

நீங்கள் உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு எமது மிகச் சிறந்த சேமிப்புக் கணக்குகள் துணைபுரிகின்றன.

hdfc-prathilaba

HDFC பிரதிலாப

உங்களுடைய அன்றாட வங்கிச்சேவை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மிகவும் உகந்த சேமிப்புக் கணக்கொன்றை எதிர்பார்க்கின்றீர்களா? HDFC பிரதிலாப இனை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது. உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ற, மிகச் சிறந்த பலாபலன்கள் மற்றும் இலகுவான பரிவர்த்தனைகளை வழங்குகின்ற சிறந்த தீர்வு.
  • குறைந்தபட்ச வைப்புத் தொகை: ரூபா. 2000/-
  • கவர்ச்சியான வட்டி வீதம்: கவர்ச்சியான வட்டி வீதங்களை அனுபவியுங்கள்.
  • விசேட வீடமைப்புக் கடன்கள்: வீடொன்றை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உங்களது கனவை நனவாக்கிக் கொள்வதற்கு, வீடமைப்புக் கடன்களுக்கு விசேட சலுகை விதிகள்.
hdfc-smart-goals

HDFC ஸ்மார்ட் கோல் திட்டங்கள்

உங்களுடைய இடைக்கால இலக்குகளை நீங்கள் அடையப்பெறுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு தனித்துவமான சேமிப்புத் திட்டமாக HDFC ஸ்மார்ட் கோல் காணப்படுகின்றது. புதிதாக காரொன்றை வாங்குவதற்கோ, திருமணம் முடிப்பதற்கோ, அல்லது மேற்படிப்புக்காக உங்களுடைய பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கோ என உங்களுடைய தேவை எதுவாக இருப்பினும், உங்களது கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கு உதவ HDFC ஸ்மார்ட் கோல் திட்டங்கள் உள்ளன.
  • குறைந்தபட்ச சேமிப்புக் காலம் 3 ஆண்டுகள்: மூன்று ஆண்டு காலத்திற்கு சேமியுங்கள். இக்காலப்பகுதியின் முடிவில், திரட்டிய வட்டியுடன் சேர்த்து உங்களுடைய வைப்புக்களை மீளப்பெற்றுக்கொள்ளுங்கள்.
  • குறைந்த தொகையில் கணக்கினை ஆரம்பிக்க முடிதல்: வெறும் ரூபா 2,000/- தொகையுடன் உங்களுடைய கணக்கினை ஆரம்பியுங்கள்.
  • உயர் வட்டி வீதங்கள்: சந்தையில் சிறந்த வட்டி வீதங்கள்.
hdfc-thilina

HDFC திலின

உங்களுடைய பிள்ளையின் நிதியியல் ஸ்திரத்தினை சிறந்த முறையில் திட்டமிடுவது, அவர்களுடைய எதிர்கால வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது. அதனாலேயே சிறுவர்களுக்கான பிரத்தியேகமான முதலீட்டுக் கணக்காக, திலின சேமிப்புக் கணக்கினை நாம் வடிவமைத்துள்ளோம். திலினவுடன் நிதியியல் நலனுக்கான வலுவான அத்திவாரத்தை நீங்கள் இட்டுக்கொள்ள முடியும்.
  • உயர் வட்டி வீதங்கள்: உங்களுடைய பிள்ளையின் சேமிப்புக்கள் வேகமாக பல்கிப் பெருகுவதை உறுதி செய்து, உயர் வட்டி வீதங்களை அனுபவியுங்கள்.
  • நெகிழ்வு: பிறப்பு முதல் 18 வயதை அடையும் வரை பிள்ளையின் சார்பில் கணக்கொன்றை ஆரம்பியுங்கள்.
  • குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை: ரூபா 2,000/- என்ற குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத் தொகையுடன் ஆரம்பியுங்கள்.
hdfc-thilina-rekawarana

HDFC திலின ரேகாவரண

எதிர்பாராத சூழ்நிலைகளிலும் நிதியியல் பாதுகாப்பினை உங்களுடைய பிள்ளைக்கு வழங்குவதில் நாம் உறுதியாக உள்ளோம். அதற்காகவே, உங்களுடைய பிள்ளையின் எதிர்கால நிதியியல் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட HDFC திலின ரேகாவரண சிறுவர் முதலீட்டுத் திட்டத்தை நாம் வழங்குகின்றோம்.
  • உத்தரவாதம் கொண்ட தொகை: நீங்கள் ஒரு தடவை வைப்பொன்றை மேற்கொள்ளும் போது, உங்களுடைய பிள்ளை 18 வயதை எட்டும் போது, வட்டி வீதங்களின் ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால், உத்தரவாத தொகைக்கு உறுதியளிக்கும் சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • முதிர்வுச் சான்றிதழ்: கணக்கினை ஆரம்பிக்கும் போதே, உங்களுடைய பிள்ளைக்கு கிடைக்கவுள்ள தொகைக்கு உத்தரவாதம் அளிக்கின்ற ஆவணமாக, முதிர்வுச் சான்றிதழ் வழங்கப்படும்.
  • நெகிழ்வுடனான வைப்புத் தெரிவுகள்: உங்களுடைய விருப்பங்கள் மற்றும் கையிலுள்ள பணத்திற்கேற்ப வைப்புத் தொகையைத் தெரிவு செய்யுங்கள். வைப்புத் தொகை, தவணை மற்றும் பிள்ளையின் வயது ஆகியவற்றின் அடிப்படையில் உத்தரவாத தொகை நிர்ணயிக்கப்படுகின்றது.
hdfc-arumbu

HDFC அரும்பு

உங்களுடைய பிள்ளையின் நிதியியல் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்கும் நோக்குடன், இலங்கையிலுள்ள தமிழ் பேசும் சமூகத்தினருக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட HDFC அரும்பு என்ற முதலீட்டுத் திட்டம் வழங்கப்படுகின்றது. உங்களுடைய பிள்ளையின் வெற்றிக்கான முதலாவது ஏணிப்படியாக இத்திட்டம் காணப்படுகின்றது.
  • உத்தரவாதம் கொண்ட தொகை: நீங்கள் ஒரு தடவை வைப்பொன்றை மேற்கொள்ளும் போது, உங்களுடைய பிள்ளை 18 வயதை எட்டும் போது, வட்டி வீதங்களின் ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால், உத்தரவாத தொகைக்கு உறுதியளிக்கும் சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • முதிர்வுச் சான்றிதழ்: கணக்கினை ஆரம்பிக்கும் போதே, உங்களுடைய பிள்ளைக்கு கிடைக்கவுள்ள தொகைக்கு உத்தரவாதம் அளிக்கின்ற ஆவணமாக, முதிர்வுச் சான்றிதழ் வழங்கப்படும்.
  • நெகிழ்வுடனான வைப்புத் தெரிவுகள்: உங்களுடைய விருப்பங்கள் மற்றும் கையிலுள்ள பணத்திற்கேற்ப வைப்புத் தொகையைத் தெரிவு செய்யுங்கள். வைப்புத் தொகை, தவணை மற்றும் பிள்ளையின் வயது ஆகியவற்றின் அடிப்படையில் உத்தரவாத தொகை நிர்ணயிக்கப்படுகின்றது.
hdfc-salary-saver

HDFC சம்பள சேவர்

மாதாந்தம் வருமானமீட்டுபவர்களுக்கு தனித்துவமானதொரு சேமிப்புத் தீர்வு. நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தை பிரகாசமானதொரு எதிர்காலத்திற்காக உறுதிசெய்வதற்கு சேமிப்பதற்கான மிகச் சிறந்த தெரிவாக இது காணப்படுகின்றது. வாழ்வில் வளர்ச்சி பெற்று, வெற்றி காண்பதற்கு உங்களுக்கு இடமளிக்கின்ற பல்வேறு நன்மைகளை இது உங்களுக்கு அளிக்கின்றது. உங்களுடைய சம்பளத்தை அல்லது மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் ரூபா 10,000 தொகையை HDFC சம்பள சேவர் கணக்கில் வைப்பிலிட ஆரம்பித்து, மகத்தான நன்மைகளை அனுபவியுங்கள்.