image

கலாநிதி கிறிஷாந்த பதிராஜா

நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீன பணிப்பாளர்
leader-inner-image

இலங்கை பெருந்தோட்ட அமைச்சின், பனை அபிவிருத்திச் சபை தலைவரான கலாநிதி கிறிஷாந்த பதிராஜா அவர்கள் 2004 ஆண்டு முதல் தனியார் மற்றும் அரச துறைகளில் கடமையாற்றியுள்ளார். நன்மதிப்புடைய தனியார் துறை நிறுவனமொன்றின் ஆலோசகராக கடமையாற்றியுள்ள அவர், தற்சமயம் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். லக்சலவிற்கான வர்த்தகநாம தூதுவரான அவர், யாழ்ப்பாணம் அபிவிருத்திச் சபைக்கும் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 இல் இந்தியா, தமிழ்நாட்டிலுள்ள DK International Research Foundation இன் அறிவியல் ஆலோசனைச் சபை அங்கத்தவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 
  
வணிக நிர்வாகம், மூலோபாய முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் கலாநிதி பதிராஜா அவர்கள் பாண்டித்தியம் பெற்றுள்ளார். கலிபோர்ணியாவின் அரச பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் கலாநிதிப் பட்டத்தையும், இந்தியாவின் Global Peace பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் கலாநிதி (விசேட) பட்டத்தையும் பெற்றுள்ள அவர், தற்போது கம்போடியாவின் ICC தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மூலோபாய முகாமைத்துவத்தில் கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றார். மேலும், ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய கணினி சங்கமான The Chartered Institute of Information Communication Technology இன் தொழில்சார் அங்கத்தவரான அவர், ஐக்கிய இராச்சியத்தின் National Computer Center இன் அங்கத்தவரும் ஆவார்.