திரு. டபிள்யூ.எம். ஆனந்த
நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீன பணிப்பாளர்
திரு. டபிள்யூ.எம். ஆனந்த அவர்கள் 2021 பெப்ரவரியில் HDFC வங்கியின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக நியமிக்கப்பட்டார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திரு. ஆனந்த அவர்கள், கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் தொழில்மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் ஆவார்.
1998 ஆம் ஆண்டில் பொது நிர்வாக அமைச்சில், ஸ்தாபனங்களுக்கான உதவிப் பணிப்பாளராக அவர் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். கண்டி மாவட்டத்தில் பஸ்பாகேகோரளை மற்றும் தொலுவ ஆகிய இடங்களின் உதவிப் பிரதேச செயலாளர் அடங்கலாக பல்வேறு பொறுப்புக்களை அவர் வகித்துள்ளார். மத்திய மாகாண சபையில் அவர் பணியாற்றும் போது, மத்திய மாகாணத்தின் கூட்டுறவு ஆணையாளருக்கான உதவிச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். அதன் பின்னர் மாத்தளை மற்றும் நுவரெலியாவில் வில்கமுவ மற்றும் பள்ளேபொல ஆகிய இடங்களின் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஊவா மாகாண சபையின் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பேராதனை பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கைநெறியில் பட்டப்பின் டிப்ளோமாவையும், மற்றும் களனி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் கலைமாணிப் பட்டத்தையும் திரு. ஆனந்த அவர்கள் பெற்றுள்ளார்.