image

கடன்கள்

கடன்கள்

உங்களுடைய தனித்துவமான தேவைகளுக்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட எமது பல்வகைப்பட்ட கடன்களைப் பெற்று அனுபவியுங்கள்.

kedella-housing-loan

கதெல்ல வீடமைப்புக் கடன்

கதெல்ல வீடமைப்புக் கடனின் துணையுடன் உங்களுடைய கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கான வழிமுறையை நாடுங்கள். ஒப்பற்ற நெகிழ்வை வழங்கும் எமது கடன், உங்களுடைய வீடமைப்புத் தேவைகள் அனைத்திற்கும் உகந்த, தனிப்பயனாக்கப்பட்ட நிதித் தீர்வை உறுதி செய்கின்றது. உங்களை மகிழ்விக்கும் வகையில் கவர்ச்சியான வட்டி வீதங்களுடன், உங்களுடைய கனவு இல்லத்தை அடையப்பெறுவதற்கான உங்களுடைய வீடமைப்பு நோக்கங்களுக்கான மிகச் சிறந்த கூட்டாளராக கதெல்ல வீடமைப்புக் கடன் காணப்படுகின்றது.
  • வீடொன்றை வாங்குதல்
  • வீடொன்றைக் கட்டுவதற்கு காணித் துண்டொன்றை வாங்குதல்
  • வீடொன்றைக் கட்டுதல்
  • தற்போதுள்ள வீட்டினை பெருப்பித்தல்
  • பகுதியளவில் கட்டப்பட்ட வீட்டை முழுமையாகக் கட்டி முடித்தல்
  • தண்ணீர் வசதி, சுகாதார வசதி மற்றும் மின்சாரம் பெற்றுக்கொள்ளல்
  • ஏற்கனவே கொண்டுள்ள வீடமைப்புக் கடனைத் தீர்த்தல்
shrama-udana-loan

ஷ்ரம உதான கடன்

வீடமைப்புத் தேவைகளுக்காக நிதியியல் ஆதரவை எதிர்பார்த்துள்ள ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்காக ஷ்ரம உதான கடன் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய வீடமைப்பு இலக்குகளை அடையப்பெற்று, உங்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு ஷ்ரம உதான உங்களுக்கு இடமளிக்கின்றது.
sirisara-housing-loan

சிரிசர வீடமைப்புக் கடன்

HDFC சிரிசர கடன் ஆனது உங்களுடைய வாழ்க்கைமுறையை மேம்படுத்தி, உங்களது இல்லத்தை சௌகரியம் மற்றும் நேர்த்தியின் சொர்க்கமாக மாற்றுவதற்கு உங்களுக்கு இடமளிக்கும் வகையில், வீட்டு உபயோக சாதனங்கள், தளபாடம் அல்லது எந்தவொரு வாழ்க்கைமுறை மேம்பாட்டு செலவினம் தொடர்பான கொள்வனவு தேவைகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • வீட்டு உபயோக சாதனங்களின் கொள்வனவு
  • வீட்டுத் தளபாடங்கள்
  • வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வேறு எந்தவொரு வாழ்க்கைமுறை மேம்பாடு தொடர்பான செலவினம்
hdfc-guarantor-loan

HDFC உத்தரவாதம் வழங்குநர் கடன்

HDFC உத்தரவாதம் வழங்குநர் கடன் மூலமாக, சம்பளம் ஈட்டுகின்ற நபர்கள் கடனைப் பெற்று, ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் சிறந்த வட்டி வீதத்துடன் மற்றும் நியாயமான மீள்கொடுப்பனவு தவணைகளுடன் பயன்பெற முடியும். இக்கடன் வசதியானது ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் சிறந்த வட்டி வீதங்களில் கிடைக்கப்பெறுகின்றது.

கடன் தொகை

  • ரூபா 1 மில்லியன் வரை.

மீள்கொடுப்பனவுக்கான தவணைக்காலம்

  • 5 ஆண்டுகள் வரை.
hdfc-development-and-corporate-loan-scheme

HDFC அபிவிருத்திக் கடன் திட்டம்

மாற்றத்திற்கு வித்திடுகின்ற எமது அபிவிருத்திக் கடன் திட்டத்தினூடாக, சிறிய, நடுத்தர மற்றும் பாரிய தொழில் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உந்துசக்தியளிப்பதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நாடெங்கிலும் வணிக முயற்சிகளை தீவிரமாக முன்னெடுப்பதில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டி, பொருளாதார விஸ்தரிப்பினை ஊக்குவித்து, வளம் கொழிக்கும் தொழில் முயற்சியாண்மை துறையொன்றை வளர்த்தெடுப்பதே எமது நோக்கம்.
  • சிறிய, நடுத்தர மற்றும் பாரிய தொழில் முயற்சிகள் தமது செயல்பாடுகளை விஸ்தரிப்பதற்காக வலுவூட்டுதல்
  • உற்பத்தித்திறனை மேம்படுத்தி, இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்திக்கு பங்களித்தல்.